நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய விவகாரத்தில் தவறுதலாக பேசியிருந்தால் I AM SORRY: பிரதமர்

சிரம்பான்:

ஆலய விவகாரத்தில் நான் ஏதும் தவறுதலாக பேசியிருந்தால் I AM SORRY. நான் தவறாகப் பேசியதுமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நான் இப்போது பிரதமராக இருக்கிறேன் என்றால் அதற்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவும் மிக முக்கியமானதாகும்.

அதன் அடிப்படையில் அச் சமுதாயத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

குறிப்பாக ஆலய விவகாரங்கள் இந்தியர்களின் உணர்வுகளை பாதிக்கும் என்று எனக்கு தெளிவாக தெரியும்.

இருந்தபோதும் இந்த ஆலய விவகாரத்தில் நான் ஏதும் தவறுதலாக பேசியிருந்தால் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் அவ்வாறு சொல்ல வரவில்லை. எனது கருத்தும் நோக்கமும் வேறுபட்டதாக இருந்தது.

இருந்தாலும் அது இந்தியர்களின் உணர்வை பாதித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கவும் நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்.

காரணம் தவறு செய்தால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறும் அளவிற்கு நான் மோசமானவன் அல்ல.

நானும் ஒரு சாதாரண மனிதன் தான் என்று சிரம்பானில் நடைபெற்ற இந்திய சமூகத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

ஆலய விவகாரத்தில் என்னதான் குறை கூறினாலும் மடானி அரசாங்கத்தின் கீழ் ஒரு ஆலயம் கூட உடைக்கப்படவில்லை.

இதை யாராலும் மறுக்க முடியாது. ஆக இது போன்ற விவகாரங்களை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset