நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தபோங் ஹாஜியின் அரச விசாரணை அறிக்கையை வெளியிட அமைச்சரவை இணக்கம்: மடானி அரசாங்க பேச்சாளர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தகவல் 

பெட்டாலிங் ஜெயா: 

தபோங் ஹாஜியை உட்படுத்திய அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கைகளை வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மடானி அரசாங்கத்தின் பேச்சாளர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்தார். 

அந்த அறிக்கையானது ஒரு நாள் கூட்டப்படும் சிறப்பு மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் என்று தொடர்பு அமைச்சருமான அவர் கூறினார். 

அறிக்கையின் அடிப்படையில் அமலாக்க அமைப்பின் முழுமையான விசாரணை உடனடியாகத் தொடரும் என அமைச்சரவை தீர்மானித்தது.

RCI அறிக்கையானது 25 மேம்படுத்தப்பட வேண்டிய கூறுகளை கோடிட்டுக் காட்டியிருப்பதாகவும் அதில் 75 விழுக்காடு கூறுகளை தபோங் ஹாஜி நிர்வாகம் செய்து முடித்துள்ளதாக அவர் சொன்னார். 

"சட்ட மீறல் ஏதேனும் நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset