செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜியின் அரச விசாரணை ஆணையத்தின் கண்டுபிடிப்புகளை வெளியிடுங்கள்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தகவல்
பெட்டாலிங் ஜெயா-
தபோங் ஹாஜி தொடர்பான RCI அறிக்கையை அரசாங்கம் பொதுவில் வெளியிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரை யாத்திரை நிதி தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி அம்னோ தான் முதன்முதலில் அரச விசாரணை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கையை விடுத்தது
எங்களுக்கு RCI தேவைப்பட்டது, எனவே விசாரணை முடிவடைந்துவிட்டதால், அதன் முடிவுகளை இரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
தாபோங் ஹாஜி தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட்டு தவறு செய்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெகிரி செம்பிலானில் உள்ள லெங்கெங் சட்டமன்ற தொகுதியின் பரப்புரையில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தாபோங் ஹஜி அரசியல் தாக்குதலுக்கு உள்ளாகி, ஏராளமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதால், RCI யாரையும் பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக உண்மையை வெளிக்கொணர்வதே அதன் நோக்கம் என்று அவர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2026, 11:03 pm
ஆலய விவகாரத்தில் தவறுதலாக பேசியிருந்தால் I AM SORRY: பிரதமர்
July 29, 2026, 10:14 pm
இந்தியர் விவகாரங்களுக்கு இனி நானே பொறுப்பேற்பேன்: பிரதமர்
July 29, 2026, 9:23 pm
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் 3 இந்தியர்கள்: டத்தோஸ்ரீ ரமணன் கோரிக்கை
July 29, 2026, 2:54 pm
