நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் 3 இந்தியர்கள்: டத்தோஸ்ரீ ரமணன் கோரிக்கை

சிரம்பான்:

நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் 3 இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இடம் பெற வேண்டும். 

இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுக்க வேண்டும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்திய சமூகத்தினருடனான பிரதமரின் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

எதிர்பாராத நிலையில் மிகப் பெரிய மக்கள் கூட்டம் இந்நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

அதே வேளையில் பிரதமர் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதால் இங்கு மக்களின் கோரிக்கையை நான் முன்வைக்கிறேன்.

நெகிரி மாநிலத்தில் குறிப்பாக சிரம்பான் சுற்று வட்டாரங்களில் மிகப் பெரிய அளவில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்கு என ஒரு மண்டபம் இல்லை. இம் மண்டபம் மக்களுக்கு பெரும் பயனாக இருக்க வேண்டும்.

ஆக வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் நம்பிக்கை கூட்டணி அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்களை பிரதிநிதிக்க மூன்று இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளையுன் பிரதமர் முன்னெடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset