செய்திகள் மலேசியா
இந்தியர் விவகாரங்களுக்கு இனி நானே பொறுப்பேற்பேன்: பிரதமர்
சிரம்பான்:
நாட்டில் இந்தியர் விவகாரங்களுக்கு இனி நானே பொறுப்பேற்பேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
நாட்டில் வாழும் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சி மேம்பாட்டிற்காக மடானி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தலைமையின் மித்ராவின் கீழ் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே வேளையில் இந்தியர் விவகாரங்களுக்கும் அவர் தான் தலைமையேற்றுள்ளார். அவர் தனது இந்த பணியை தொடர்வார்.
இருந்தாலும் இந்தியர் விவகாரங்களுக்கு இனி நானே முழுமையாக பொறுப்பேற்க உள்ளேன்.
குறிப்பாக இந்தியர்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களை நான் கண்காணிக்க உள்ளேன்.
இதன் மூலம் இச்சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு பிறக்கும்.
சிரம்பானின் நடைபெற்ற இந்திய சமூக மக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2026, 11:03 pm
ஆலய விவகாரத்தில் தவறுதலாக பேசியிருந்தால் I AM SORRY: பிரதமர்
July 29, 2026, 9:23 pm
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் 3 இந்தியர்கள்: டத்தோஸ்ரீ ரமணன் கோரிக்கை
July 29, 2026, 2:54 pm
