செய்திகள் மலேசியா
கடைசி நேர பிரச்சாரத்தில் பரப்பப்படும் விமர்சனங்களை பற்றி கவலையில்லை; சிரம்பான் ஜெயா மக்களின் ஆதரவை பெற தொடர்ந்து முயற்சிப்பேன்: டத்தோ தினாளன்
சிரம்பான்:
கடைசி நேர பிரச்சாரத்தில் வைக்கப்படும் விமர்சனங்களை பற்றி எனக்கு கவலையில்லை.
சிரம்பான் ஜெயா மக்களின் ஆதரவை பெற தொடர்ந்து முயற்சிப்பேன் என்று அத்தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளன் கூறினார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் சுமார் 90 விழுக்காடு வீடுகளுக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்துள்ளதாகவும், பெரும்பாலான மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர்.
தேர்தல் பிரசாரத்தின் போது மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது கருத்துகளையும் குறைகளையும் கேட்டறிந்து வருவதாக அவர் கூறினார்.
நான் இதுவரை சுமார் 90 விழுக்காடு வீடுகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்துள்ளேன். மக்கள் தற்போது எதிர்கொண்டு வரும் வாழ்க்கைச் சுமைகள் குறித்து அதிகம் பேசுகின்றனர்.
குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு ஆகியவை மக்களின் முக்கியக் கவலையாக உள்ளன.
இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர் என்றார்.
அத்துடன், தொகுதியின் சில பகுதிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் திருப்திகரமாக இல்லையென பொதுமக்கள் புகார் தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனது தேர்தல் குழுவினருடன் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மக்களின் குறைகளை கேட்டு மட்டும் நிற்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது அணுகுமுறை.
அதனால்தான் மக்கள் சுட்டிக்காட்டிய பகுதிகளில் நேரடியாகச் சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டோம் என்றார்.
தான் வெற்றி பெற்றால், தொகுதி மக்களின் பிரச்சினைகளை விரைவாகக் கையாளும் வகையில் சிறப்பு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் அலுவலகத்திற்கே வர வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை செயலி மூலம் நேரடியாகப் பதிவு செய்ய முடியும். அதன்மூலம் புகார்களை விரைவாகப் பெற்று நடவடிக்கை எடுக்க முடியும். இந்தத் திட்டத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்," என்றார்.
அரசியல் விமர்சனங்கள் குறித்துப் பேசிய டத்தோ ஆர். தினாளன், தேசிய முன்னணி மற்றும் மஇகாவின் வளர்ச்சியைக் கண்டு எதிர்த்தரப்பு அச்சமடைந்துள்ளதாகக் கூறினார்.
"எங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்திருப்பது, அவர்கள் எங்களைப் பார்த்து அச்சப்படுகின்றனர் என்பதையே காட்டுகிறது. ஆனால், அதனை நான் பொருட்படுத்தவில்லை. மக்களுக்கு சேவை செய்வதே எனது ஒரே நோக்கம்," என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2026, 11:03 pm
ஆலய விவகாரத்தில் தவறுதலாக பேசியிருந்தால் I AM SORRY: பிரதமர்
July 29, 2026, 10:14 pm
இந்தியர் விவகாரங்களுக்கு இனி நானே பொறுப்பேற்பேன்: பிரதமர்
July 29, 2026, 9:23 pm
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் 3 இந்தியர்கள்: டத்தோஸ்ரீ ரமணன் கோரிக்கை
July 29, 2026, 2:54 pm
