நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: தேர்தல் பரப்புரை காலங்களில் போலிஸ் 19 விசராணை அறிக்கைகள் திறக்கப்பட்டன 

சிரம்பான் - 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரை காலங்களில் போலிஸ் 19 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளன என்று நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அல்சஃப்னி அஹ்மத் கூறினார். 

கடந்த ஜூலை 18 முதல் நேற்றுவரை சுமார் 62 போலிஸ் புகார்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 19 வழக்கில் விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன 

ஊழல் வழங்கியதாக 1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் செக்‌ஷன் 11இன் கீழ் மூன்று விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

மேலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக வகை செய்யும் 1998 தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் செக்‌ஷன் 233இன் கீழ் ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது 

பொது சொத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 427இன் கீழ் மற்றொரு விசாரணை அறிக்கை ஒன்றும் திறக்கப்பட்டதாக அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் 

மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போலிஸ் அதன் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க செய்யும் அவர் சொன்னார். 


தேர்தல் அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற பொதுமக்கள் அனைவரும் சட்டத்திட்டங்களையும் மக்களாட்சியையும் மதிக்கவும் தொடர்ந்து அரச மலேசிய போலிஸ் படையுடன் ஒத்துழைப்பு நல்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset