செய்திகள் மலேசியா
சொந்த மகளைப் பாலியல் வல்லுறவு புரிந்த தந்தை: ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
பெட்டாலிங் ஜெயா:
கடந்தாண்டு தொடங்கி இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை தனது சொந்த மகளைப் பாலியல் வல்லுறவு புரிந்ததாக தந்தை ஒருவர் இங்குள்ள செத்தியு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
இருப்பினும், 52 வயதான குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை தனக்கு எதிரான அனைத்து குற்றங்களை மறுத்து விசாரணை கோரினார்.
முதல் மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் 2025ஆம் ஆண்டு ஜனவரி, மார்ச், மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் செத்தியுவில் உள்ள ஓர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவரை பாலியல் வல்லுறவு புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது
நான்காவது குற்றச்சாட்டானது குற்றஞ்சாட்டப்பட்டவர் அதே செயலை இவ்வாண்டு ஜனவரி மாதம் மாலை 5 மாணிக்கு அதே இடத்தில் புரிந்ததாக பதிவு செய்யப்பட்டது அப்போது பாதிக்கப்பட்டவருக்கு வயது 14 ஆகும்.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, சந்தேக நபர் காலை 8.30 மணியளவில் அதே இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அனைத்து குற்றச்சாட்டுகளும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 376(3)-ன் கீழ் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது சுமத்தப்பட்டது. இது குறைந்த 8 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை , 10 பிரம்படிகளும் தண்டனையாக வழிவகுக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20,000 ரிங்கிட் பிணை வழங்க நீதிமன்றம் அனுமதித்தது. இருப்பினும், பாதிக்கப்பட்டவரைத் தொந்தரவு செய்யக்கூடாது மற்றும் வழக்கு விசாரணை முடியும் வரை அருகிலுள்ள காவல்நிலையத்தில் வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் நீதிமன்றம் பிணை வழங்க அனுமதித்தது
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதுடன், ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேதியும் ஆகஸ்ட் 26 ஆகும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 29, 2026, 11:03 pm
ஆலய விவகாரத்தில் தவறுதலாக பேசியிருந்தால் I AM SORRY: பிரதமர்
July 29, 2026, 10:14 pm
இந்தியர் விவகாரங்களுக்கு இனி நானே பொறுப்பேற்பேன்: பிரதமர்
July 29, 2026, 9:23 pm
