நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியா தோல்வி: தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா  

கேப் டவுன்:

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரின் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா தொடக்கம் முதல் தடுமாறி வந்தது. 

India vs South Africa Highlights, 3rd Test, Day 4: South Africa cruise to  seven-wicket win over India; seal series 2-1 | Hindustan Times

முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 

தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்களை அடித்தது. 13 ரன்கள் குறைவாக எடுத்தது.

2வது இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களை மட்டுமே பெற முடிந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எளிதாக அடைந்தது. அதாவது 212 ரன்கள் அடித்தது. இறுதியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அது வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 223
இரண்டாவது இன்னிங்ஸ்: 198 (அனைத்து விக்கெட்டுகளும் இழப்பு)
தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 210
இரண்டாவது இன்னிங்ஸ்: 212 (மூன்று விக்கெட் இழப்பு)

தொடர்புடைய செய்திகள்

+ - reset