செய்திகள் கலைகள்
நடிகர் ஹனிபாவின் குடும்பத்தினர், அவர் மறைந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது புதிய கனவு இல்லத்திற்குள் குடிபுகுந்தனர்
கொச்சின்:
மறைந்த புகழ்பெற்ற நடிகர் கொச்சின் ஹனிபாவின் (Cochin Haneefa) குடும்பத்தினர், அவர் மறைந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது புதிய சொந்தக் கனவு இல்லத்திற்குள் குடிபுகுந்துள்ளனர்
இந்த இல்லத்திற்கு "கொச்சின் ஹனிபாஸ் ஏ.பி. மன்சில்" (Cochin Haneefa's A.B. Manzil) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது கொச்சியில் உள்ள வெண்ணலா (Vennala) பகுதியின் அம்பேத்கர் ரோட்டில் அமைந்துள்ளது. தனது வீட்டிற்கு தந்தை ஏ.பி. முஹம்மதுவின் பெயரை வைக்க வேண்டும் என்பது ஹனிபாவின் நீண்ட நாள் ஆசையாகும்.
இது மூன்று அடுக்குகள் (3 Floors) மற்றும் 5 படுக்கையறைகள் கொண்ட ஓர் இல்லமாகும்.
ஹனிபா காலமான போது 4 வயதாக இருந்த அவருடைய இரட்டைப் பெண் குழந்தைகளான சஃபா (Safa), மார்வா (Marwa) ஆகிய இருவருமே இந்த வீட்டின் இன்டீரியர் டிசைனை வடிவமைத்துள்ளனர்.
வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொச்சின் ஹனிபா பெற்ற விருதுகள், புகைப்படங்கள், அவரது நினைவை போற்றும் பொருட்கள் அழகாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.
குணச்சித்திர நடிகரான ஹனிபா 2010 இல் மறைந்த பிறகு, அவரது சொத்துக்கள் சில சட்டரீதியான சிக்கல்களில் சிக்கியிருந்தன. இதனால் அவரது மனைவி ஃபாசிலாவும் மகள்களும் கடந்த 16 வருடங்களாக கடவந்த்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில்தான் வசித்து வந்தனர்.
தற்போது மகள்களுக்கு 18 வயது பூர்த்தியானதைத் தொடர்ந்து சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, ஹனிபாவின் சொந்த சேமிப்புப் பணத்தைக் கொண்டே யாருடைய நிதியுதவியும் இன்றி இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் புதுமனை புகு விழா (Housewarming Ceremony) சமீபத்தில் நடைபெற்றது. இதில் மலையாள நடிகர்கள் திலீப், ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட நெருங்கிய திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.
ஹனிபாவின் குடும்பத்தினர் தங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் தூணாக நின்ற நடிகர் திலீப்பிற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
ஹனிபா மறைந்த பிறகு அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக, ஹனிபா வைத்திருந்த டொயோட்டா இன்னோவா காரை கடந்த 16 வருடங்களாக தனது படப்பிடிப்புத் தளங்களில் பயன்படுத்தி வருமானம் கிடைக்க திலீப் ஏற்பாடு செய்து உதவியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:45 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள DC திரைப்படம்: அனிருத் இசை சம்பவம்
August 6, 2026, 4:59 pm
புதுச்சேரியில் 3ஆவது உலகத் திரைப்பட விழா: 10 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும்
August 6, 2026, 4:48 pm
ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் செப்டம்பர் 4இல் வெளியாகிறது
August 5, 2026, 7:16 am
கஜினி, வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
July 30, 2026, 10:47 am
44 வயதில் தான் உங்களுக்கான வாழ்வு தொடங்குகிறது: ஓப்ராவின் அறிவுரைக்கு ஆமென் என பதிவிட்ட த்ரிஷா
July 28, 2026, 5:47 pm
