செய்திகள் மலேசியா
டான் ஸ்ரீ அய்யோப் கானுக்கு பிரியாவிடையும் பிறந்த நாள் விழாவும்: மலேசிய இந்திய முஸ்லிம்கள் இணைந்து நடத்தினர்
கோலாலம்பூர்:
அரச போலிஸ் படையின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் டான் ஸ்ரீ அய்யோப் கானுக்கு மலேசிய இந்திய முஸ்லிம்கள் இணைந்து அவரது சேவையைப் பாராட்டி இரவு விருந்துடன் கூடிய பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
நிகழ்வில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மஸ்ஜித் இந்தியா இமாம் டாக்டர் செய்யது இப்ராஹிமின் துஆவுடன் துவங்கிய விழாவில் டத்தோ சிராஜ்தீன் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து ஓரிஜினல் நாசிகண்டார் காயுவின் தலைவர் ஹாஜி புர்ஹான் அனைவரையும் வரவேற்றார்.
வங்கியாளர் ரஃபி ஹனீஃப், டத்தோ ஜவஹர் அலி, சேகு நூருல் ஹசன், பெரஸ்மா தலைவர் டத்தோ மொஹ்சின், டத்தோ பிடிசி அப்துல் காதர், டத்தோ ஸ்ரீ வஸிஹர் ஹஸன், டத்தோ ஸ்ரீ அக்மல் உட்பட முக்கிய பிரமுகர்கள் அய்யோப் கானின் சேவைகளையும் அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பணியாற்றியதையும் சுட்டிக் காட்டி வாழ்த்திப் பேசினார்கள்.
இறுதியில் டான்ஸ்ரீ அய்யோப் கான் மைதீன் பிச்சை ஏற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தன்னாலான சேவைகளை வழங்குவேன் என்று கூறினார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புப் பணிகளை கியூ பிஸ்ட்ரோ தலைவர் ஹாஜி ரியாஸ் செய்தார். சகோதரர் அஸ்ரின் நிகழ்ச்சியை வழி நடத்தினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 5:03 pm
மெனாரா மெர்டேக்கா 118 கட்டிடம் இனி மெனாரா மெர்டேக்கா மேபேங்க் என பெயர்மாற்றம் கண்டுள்ளது
July 28, 2026, 3:45 pm
இஸ்ரேல் நாட்டு பயண ஆவணத்தை மலேசியா அங்கீகரிக்காது: உள்துறை அமைச்சு திட்டவட்டம்
July 28, 2026, 3:15 pm
