நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி.: உன்னாவ் பாலியல் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் தாய் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டி

புது டெல்லி:

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 50 பெண்கள் உள்பட 125 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

உன்னாவ் தொகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதையொட்டி, 50 பெண்கள் உள்பட 125 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் உன்னாவ் தொகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் தாய் ஆஷா சிங்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

UP elections: Mother of Unnao rape victim in Congress's first list of  candidates - Hindustan Times

மத்திய லக்னௌ தொகுதி வேட்பாளராக சிஏஏ போராட்ட செயற்பாட்டாளரும் காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளருமான சதஃப் ஜாபர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமுதாய சுகாதார சேவைப் பணியாளர்களின் நலனுக்காக போராடிவரும் பூனம் பாண்டே ஷாஜஹான்பூர் வேட்பாளராகவும், பழங்குடியின மக்களுக்காக குரல் எழுப்பிவரும் பழங்குடியினத் தலைவர் ராம்ராஜ் கோன்ட், போங்கா தொகுதியிலும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய்குமார் லல்லு தம்குஹிராஜ் தொகுதியிலும், சட்டப் பேரவைக் குழு காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஸ்ரா மோனா,  ராம்பூர் காஸ் தொகுதியிலும் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித் பரூகாபாத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset