
செய்திகள் வணிகம்
வணிக, தொழில் நடவடிக்கைகளுக்காக மலேசியாவின் கதவுகள் திறந்தே இருக்கும்: மொஹைதின் யாசின்
புத்ராஜெயா:
நாட்டின் எல்லைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தாலும், அனைத்துவிதமான வணிக, தொழில் நடவடிக்கைகளுக்காக மலேசியாவின் கதவுகள் திறந்தே உள்ளன என்று தேசிய மீட்பு மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.
துபாயில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழில்துறை பிரமுகர்கள் பங்கேற்ற மதிய விருந்துபசரிப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காரணமாக மலேசியா எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும், இங்குள்ள வாய்ப்புகள் குறித்தும் விவரித்தார்.
"மலேசியாவின் பொருளியல் மற்றும் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பில், கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததைவிட மிக அதிகமான வாய்ப்புகள் தற்போது உள்ளன. மேலும், எங்களது எல்லைகள் மூடப்பட்டு இருந்தாலும், வணிக, தொழில் நடவடிக்கைகளுக்காக மலேசியாவின் கதவுகள் நிச்சயமாகத் திறந்திருக்கும். இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
"முதலீட்டாளர்களுக்கான மதிப்பு விகிதாச்சாரம் மலேசியாவில் ஸ்திரமாக உள்ளது. மேலும் முதலீட்டுக்கான அமைப்பும் வலுவாக உள்ளது.
"தொழில் மேற்கொள்வதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன. மேலும், கொரோனா பிடியில் இருந்து நாடு மீண்டு வருகிறது.
"உள்கட்டமைப்பு, மின்னிலக்க கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு திறமைகளும் ஆற்றலும் நிறைந்த மலேசியாவின் பொருளாதார அடிப்படைக் கூறுகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன," என்று டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm