நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொங்கல் திருநாள் அனைத்து மலேசியர்களுக்கும் புதிய வாய்ப்புகளை தரும்: பிரதமர் நம்பிக்கை

புத்ராஜெயா:

இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை (ஜனவரி 17) கொண்டாடப்படும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறியுள்ளார்.

இந்தப் பொங்கல் திருநாள் கொண்டாட்டமானது மலேசிய குடும்பங்களுக்கு இடையே ஒற்றுமையையும் இணக்கத்தையும் வளர்த்தெடுக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறுவடைதை் திருநாள் பண்டிகையானது அனைத்து மலேசியர்களுக்கும் வளத்தை தருவதுடன், புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் என்று நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர், பொங்கல் திருநாளைக் கொண்டாடும், மலேசிய குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தமது பொங்கல் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் அளிக்கும் இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதற்கான அடையாளமாகவே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.

தை மாதம் பிறந்தால் புதிய வாய்ப்புகள் அமையும் என்பதை உணர்த்தும் விதமாகவே 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற சொற்றொடர் வழக்கத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ் நாள்காட்டியில் பத்தாவது மாதமாக, இடம்பெற்றுள்ளது தை மாதம் என்றும், இது மிகப்பெரிய கொண்டாட்டமாக, குறிப்பாக விவசாய சமூகத்தின் கொண்டாட்டத் தருணமாக உள்ளது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறியுள்ளார்.

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் தமிழ்ச் சமூகம் பொங்கல் (சீனி சோறு - சர்க்கரைப் பொங்கல்) படைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset