நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சியைக் கலைக்கும் பரிந்துரை: டான்ஶ்ரீ முஹைடின் யாசின் நிராகரிப்பு 

கோலாலம்பூர்- 

பெர்சத்து கட்சி கலைக்கப்பட்டு மீண்டும் அம்னோவில் இணையக்கூடும் என்ற பரிந்துரைகள் வந்த நிலையில் அதனை பெர்சத்து கட்சியின் தேசிய தலைவர் டான்ஶ்ரீ முஹைடின் யாசின் முற்றிலுமாக மறுத்துள்ளார். 

பெர்சத்து கட்சி தொடர்ந்து தேசிய அரசியலில் இடம்பெற்று நாட்டின் அரசியலுக்காக பாடுபடும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

பெர்சத்து ஒரு மிகவும் அர்த்தமுள்ள அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ளது; அது தற்காலிகமாக உருவாக்கப்பட்டு, பின்னர் அரசியல் களத்திலிருந்து மறைந்துபோன ஒரு கட்சி அல்ல.

கடந்த ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் பெர்சத்து கட்சி போசமான அடைவுநிலையைப் பதிவு செய்தனர். 

இதனால் பெர்சத்து கட்சியை கலைத்து விடுவது தான் நல்லது என்று அம்னோ மூத்த தலைவர்களில் ஒருவரான டான்ஶ்ரீ முஹம்மத் யூசோஃப் லத்திப் கூறிய கூற்றுக்கு முஹைடின் யாசின் பதிலளித்தார். 

இனம், மதம் மற்றும் தேசத்திற்கான போராட்டக் கொள்கைகளின் அடிப்படையில் பெர்சத்து கட்சி நிறுவப்பட்டது என்றும் தற்போது நாடு தழுவிய நிலையில் 5,000 கிளைகள், 180 பிரிவுகள் மற்றும் கிட்டத்தட்ட 5 லட்சம் உறுப்பினர்களைப் பெர்சத்து கட்சி கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமருமான அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset