செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் வேட்பாளராக ஜலாலுதீன் நிறுத்தப்படலாம்: ஹம்சா சைனுடின் தகவல்
சிரம்பான் -
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசார் வேட்பாளராக அம்மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் நிறுத்தப்படலாம் என்று தேசிய கூட்டணியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் கூறினார்.
BN- PN இணைந்து மாநில அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில் யார் புதிய மந்திரி பெசார் என்ற விவகாரத்தில் கலந்தாலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நடப்பு சூழலில் மந்திரி பெசார் வேட்பாளர் என்பது கண்டறிவதில் சிரமமாக உள்ளது. இருப்பினும், இந்த தேர்தலில் தேசிய முன்னணிக்கு தேசிய கூட்டணி வற்றாத ஆதரவினை வழங்குகிறது.
BN கட்சியிலிருந்து புதிய மந்திரி பெசார் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் அதற்கு PN ஆதரவு வழங்குவதாகவும் கடந்த ஜூலை 19 அன்று நெகிரி மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் கூறியிருந்தார்.
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் வேட்பாளர்களில் அம்னோ துணைத்தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான், ஶ்ரீ மெனாந்தி வேட்பாளர் சுஃபியான் மரட்சி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் BN -PN இணைந்து தேர்தலைச் சந்திக்கும் வேளையில் BN 25 சட்டமன்ற தொகுதிகளிலும் PN 11 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 3:32 pm
நெட்வொர்க் ஸ்கூல் மூடப்பட்ட விவகாரம்: உடனடியாக விசாரணையை மேற்கொள்ள பாஸ் கட்சி கோரிக்கை
July 23, 2026, 12:52 pm
பெர்சத்து கட்சியைக் கலைக்கும் பரிந்துரை: டான்ஶ்ரீ முஹைடின் யாசின் நிராகரிப்பு
July 23, 2026, 10:46 am
