செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்; எதிர் கூட்டணியின் திட்டம் இங்கு பலிக்காது: குணராஜ்
சிகாமட்:
எதிர் கூட்டணியின் திட்டம் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பலிக்காது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் நேற்று பல தொகுதிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
இதில் சிகாமட் தொகுதியில் உள்ள பல்லின வாக்காளர்களை சந்தித்ததுடன் உரையும் ஆற்றினார்.
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் மாநில மக்களின் நலனுக்காகவும் மாநில மேம்பாட்டிற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் அவரின் தலைமையிலான நம்பிக்கை கூட்டணியின் ஆட்சி நெகிரி செம்பிலானில் நீடிக்க வேண்டும்.
இதற்கு மக்கள் நம்பிக்கை கூட்டணி முழுமையான ஆதரவை கொடுக்க வேண்டும்.
எதிரில் உள்ள கட்சிகள் திடீரென கூட்டணி அமைத்து இத்தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
அக்கூட்டணியில் உள்ளவர்கள் ஏதோ ஒரு திட்டத்தை கொண்டுள்ளனர்.
அந்த திட்டங்கள் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பலிக்காது என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 3:32 pm
நெட்வொர்க் ஸ்கூல் மூடப்பட்ட விவகாரம்: உடனடியாக விசாரணையை மேற்கொள்ள பாஸ் கட்சி கோரிக்கை
July 23, 2026, 12:52 pm
