நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடையாள அட்டையில் வசிப்பிட முகவரியை மாற்ற எந்தவொரு கட்டாயப்படுத்தும் வகையில் பிரச்சாரமோ சிறப்பு நடவடிக்கையோ இல்லை : தேசிய பதிவு துறை 

புத்ராஜெயா- 

பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டையில் உள்ள வசிப்பிட முகவரியை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ கட்டாயப்படுத்தும் எந்தவொரு பிரச்சாரமோ சிறப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது 

இந்த தகவலை தேசிய பதிவு துறை தனது சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவித்துள்ளது. 

மலேசியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க எந்தவொரு சிறப்பு நடவடிக்கைகளும் இல்லை. 

அடையாள அட்டையில் உள்ள தகவல்கள் எப்போதும் துல்லியமாகவும் புதுப்பித்த நிலையிலும் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு ஒவ்வொரு அடையாள அட்டை உரிமையாளரையும் சார்ந்தது.

அடையாள அட்டையில் வசிப்பிட முகவரியை மாற்ற மலேசியர்கள் கட்டாயமாக்கப்படுகிறார்கள் என்ற போலியான செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டது. 

முன்னதாக, அடையாள அட்டையில் உள்ள வசிப்பிட முகவரிகளை மாற்றாவிடில் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து தேசிய பதிவு துறை இந்த விளக்கத்தை அளிக்க முன் வந்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset