செய்திகள் விளையாட்டு
"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!": லியோனல் மெஸ்ஸி உருக்கம்
நியூ யார்க்:
உலகக் கோப்பையை வெல்வதை விட, இந்த நீண்ட பயணத்தில் தனக்குக் கிடைத்த நண்பர்களும் மனிதர்களுமே முக்கியம் என்று அவர் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். மெஸ்ஸியின் இந்த செய்தி, அவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த மெஸ்ஸி, இந்த அணியுடன் செலவழித்த நாட்களே தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும், அவர்கள் அனைவரும் ஒரு அணியாக மட்டும் இல்லாமல், ஒரு குடும்பமாகவே வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்திக்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதையும் இருக்கிறது. சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நியூயார்க் மைதானத்தில் 2016 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தோற்ற விரக்தியில், மெஸ்ஸி கண்ணீருடன் தனது ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2026, 9:36 am
அர்ஜெண்டினா அணியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
July 21, 2026, 9:26 am
உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி தங்க காலணியை எம்பாப்பே வென்றார்
July 20, 2026, 10:11 am
உலகக் கிண்ணத்தை தக்கவைக்கத் தவறியதால் கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி
July 20, 2026, 10:04 am
உலகக் கிண்ணம் மெஸ்ஸியின் படை வீழ்ந்தது: ஸ்பெய்ன் சாம்பியன்
July 19, 2026, 10:41 am
மெஸ்ஸியின் சாதனையை எம்பாப்பே முறியடித்தார்
July 19, 2026, 10:40 am
