செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸியின் சாதனையை எம்பாப்பே முறியடித்தார்
மியாமி:
இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்சின் இரண்டாவது கோலை அடித்ததன் மூலம், கிளையன் எம்பாப்பே உலகக் கிண்ண போட்டி வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த கோலின் மூலம் 27 வயதான அந்த முன்கள வீரர், மூன்று உலகக் கிண்ண போட்டிகளில் 22 கோல்களை அடித்து, லியோனல் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்தார்.
நாளை அதிகாலையில் ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குச் செல்லும் நிலையில், எம்பாப்பே இப்போது அர்ஜெண்டினா நட்சத்திர வீரரை விட ஒரு கோல் முன்னிலையில் உள்ளார்.
இறுதிப் போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்தால், எம்பாப்பேவின் சாதனையை சமநிலை செய்யவோ அல்லது முறியடிக்கவோ அவருக்கு வாய்ப்புள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2026, 12:27 pm
"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!": லியோனல் மெஸ்ஸி உருக்கம்
July 20, 2026, 10:11 am
உலகக் கிண்ணத்தை தக்கவைக்கத் தவறியதால் கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி
July 20, 2026, 10:04 am
உலகக் கிண்ணம் மெஸ்ஸியின் படை வீழ்ந்தது: ஸ்பெய்ன் சாம்பியன்
July 19, 2026, 10:40 am
உலகக் கிண்ணம்: பிரான்ஸை வீழ்த்தி 3ஆவது இடத்தை பிடித்தது இங்கிலாந்து
July 17, 2026, 5:14 pm
