நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம் மெஸ்ஸியின் படை வீழ்ந்தது: ஸ்பெய்ன் சாம்பியன்

நியூயார்க்:

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்ற 2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஸ்பெய்ன் அணி  உலகக் கிண்ணத்தை கைப்பற்றி மகுடம் சூடியது.


போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. 

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 

இதற்கிடையே, போட்டியின் கூடுதல் நேரத்தில் (90+3' நிமிடம்) அர்ஜெண்டினா வீரர் பெர்னாண்டஸ் முரட்டு ஆட்டம் விளையாடியதால், சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 

இது அர்ஜெண்டினா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்பெயின் அணி ஆக்ரோஷமாக விளையாடியது. 
ஆட்டத்தின் 106ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டார்ரஸ் அர்ஜெண்டினாவின் தடுப்பாட்டத்தை உடைத்து, பந்தை லாவகமாக கோல் வலையினுள் செலுத்தினார். 

இதனால் அரங்கத்தில் இருந்த ஸ்பெயின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.

இறுதிவரை பதிலடி கொடுக்க அர்ஜெண்டினா போராடியும் பலன் கிடைக்கவில்லை. 

இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து உலகக் கிண்ணத்தை உச்சிமுகர்ந்தது. 

நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset