செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: பிரான்ஸை வீழ்த்தி 3ஆவது இடத்தை பிடித்தது இங்கிலாந்து
மியாமி:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பிரான்ஸை விழ்த்தியது.
23ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 3ஆவது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்சும், இங்கிலாந்தும் இன்று மோதின.
இதில் ஆட்டத்தின் துவக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணிக்கு 3ஆவது நிமிடத்திலேயே முதல் கோல் கிடைத்தது.
இந்த கோலை டெக்லான் ரைஸ் அடித்தார். தொடர்ந்து, அதே வேகத்தில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு அடுத்த கோலுக்கு அதிக நேரம் ஆகவில்லை.
ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் அந்த அணியின் எஸ்ரி கோன்சா 2ஆவது கோலை பதிவு செய்தார். இதனால், 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளும் மாத்தி மாத்தி கோல் வாய்ப்புகளை உருவாக்கின. இருப்பினும் அதன் பலன் இங்கிலாந்துக்கே கிடைத்தது.
இங்கிலாந்தின் புகாயோ சாகா ஆட்டத்தின் 37, 45+1 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது.
அதன் பலனாக, ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் கைலியன் எம்பாப்பே தனது முதல் கோலை பதிவு செய்தார்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணிக்காக 54ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா இரண்டாவது கோலை அடித்தார்.
பின்னர் 66ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்த எம்பாப்பே, போட்டியை 4-3 என்ற கணக்கில் பரபரப்பான கட்டத்துக்கு கொண்டு சென்றார்.
ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்தநிலையில் 87ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய புகாயோ சாகா தனது 3ஆவது கோலையும் அணியின் 5ஆவது கோலையும் பதிவு செய்தார்.
ஆட்டத்தின் 90+4-வது நிமிடத்தில் பிரான்ஸின் உஸ்மான் டெம்பலே கோல் அடிக்க முன்னிலை 5-4 ஆக குறைந்தது.
இருப்பினும் 90+8-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜுட் பெல்லிங்ஹாம் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து 3ஆவது இடத்தை பிடித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2026, 12:27 pm
"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!": லியோனல் மெஸ்ஸி உருக்கம்
July 20, 2026, 10:11 am
உலகக் கிண்ணத்தை தக்கவைக்கத் தவறியதால் கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி
July 20, 2026, 10:04 am
உலகக் கிண்ணம் மெஸ்ஸியின் படை வீழ்ந்தது: ஸ்பெய்ன் சாம்பியன்
July 19, 2026, 10:41 am
மெஸ்ஸியின் சாதனையை எம்பாப்பே முறியடித்தார்
July 17, 2026, 5:14 pm
