செய்திகள் மலேசியா
வவாசான் கட்சியின் மத்திய செயலவையில் புரட்சி அமைப்பின் பிரதிநிதி இடம் பெறுவார்: டத்தோஸ்ரீ ஹம்சா
பெட்டாலிங்ஜெயா:
வவாசான் கட்சியின் மத்திய செயலவையில் புரட்சி அமைப்பின் பிரதிநிதி இடம் பெறுவார்.
வவாசான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
புரட்சி அமைப்பையும் அதன் தலைவர் உமாகாந்தனையும் எனக்கு இப்போது தெரியாது.
பல ஆண்டுக்கும் முன்பில் இருந்தே எனக்கு அவரை தெரியும்.
இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக இந்த புரட்சி அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
தற்போது வவாசான் கட்சியுடன் அவ்வமைப்பின் போராட்டம் தொடரவுள்ளது.
வவாசான் பல்லின மக்களை கொண்ட கட்சியாகும். இங்கு எந்த இனத்திற்கும் முன்னுரிமை இல்லை.
அனைத்து இனங்களின் நலனுக்காக வவாசான் கட்சி போராடும்.
தற்போது புரட்சி அமைப்புடன் இணைந்து இந்தியர்களின் நலனையும் நாங்கள் உறுதி செய்வோம்.
அதன் அடிப்படையில் புரட்சி அமைப்பின் பிரதிநிதி ஒருவர் வவாசான் கட்சியின் மத்திய செயலவையில் இணைத்து கொள்வார்.
புரட்சி அமைப்பின் அரசியல் மாநாட்டை தொடக்கி வைத்த டத்தோஸ்ரீ ஹம்சா இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2026, 7:44 pm
சிரம்பான் ஜெயா தொகுதிக்கு நான் புதியவன் அல்ல; மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவேன்: முகுந்தன்
July 20, 2026, 5:38 pm
சுவா தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை: அமினுடின் ஹரூன் விளக்கம்
July 20, 2026, 4:48 pm
துன் டாக்டர் மகாதீர் முஹம்மதை சந்தித்த ஈமான் கட்சியின் நிர்வாகக் குழுவினர்
July 20, 2026, 2:03 pm
