செய்திகள் மலேசியா
தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்பாளர் சங்கத்தின் இலவச மருத்துவ முகாம்
காஜாங்:
காஜாங் தாமான் கோப்பராசி பொதுமக்கள் மத்தியில் சுகாதார நலனில் முன்னுரிமை வழங்கும் நோக்கத்துடன் இலவச சுகாதார பரிசோதனை முகாம், ரத்ததான முகாம் மேற்கொள்ளப்பட்டன.
காஜாங், தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஏழாவது முறையாக இலவச சுகாதார இந்நிகழ்ச்சி மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்புச் சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சங்கிலி முத்து இரத்தினம் கூறினார்.
இன்று ஜூலை மாதம் 19ஆம் தேதி தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் சமூகநல மண்டபத்தில் 2026 ஆம் ஆண்டின் மனித நேய ரத்ததானம் முகாம்_ இலவச சுகாதார பரிசோதனையில் நீரிழிவு, ரத்தம் பரிசோதனை போன்ற சுகாதாரப் பரிசோதனைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷா ரெட்ஷான் ஜோஹான், செனட்டர் தியாகராஜன் ராஜகோபால், பாங்கி கெஅடிலான் தொகுதித் தலைவர் புவான் லிம் கிம் எங், தாமான் கோப்பராசி கியூபெக்ஸ் குடியிருப்பாளர் சங்கப் பொறுப்பாளர்கள், பொது மக்கள் உட்பட
சுமார் 250 பேர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற காரணமாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் செயலவை உறுப்பினர்களுக்கும்
பொது மக்களுக்கும் டத்தோ சங்கிலிமுத்து நன்றி தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் கண் பார்வை, பல் மற்றும் இதர சிகிச்சைகளை பொதுமக்கள் பெற்று பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2026, 7:44 pm
சிரம்பான் ஜெயா தொகுதிக்கு நான் புதியவன் அல்ல; மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவேன்: முகுந்தன்
July 20, 2026, 5:38 pm
சுவா தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை: அமினுடின் ஹரூன் விளக்கம்
July 20, 2026, 4:48 pm
துன் டாக்டர் மகாதீர் முஹம்மதை சந்தித்த ஈமான் கட்சியின் நிர்வாகக் குழுவினர்
July 20, 2026, 2:03 pm
