செய்திகள் மலேசியா
மத்திய அரசாங்கத் தலைவர்களைத் தாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: அன்வாருக்கு ஹசான் பதில்
ரந்தாவ்:
பிரச்சாரத்தின் போது எந்தவொரு மத்திய அரசுத் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கம் தனக்கு இல்லை.
ஆனால் பிரதமரின் உத்தரவின் பேரில் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ரந்தாவ் தொகுதியில் போட்டியிடும் அம்னோ கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ள அவர்,
தனது பிரச்சாரம் அனைத்து வாக்காளர்களுக்கும் செய்தி சென்றடைவதை உறுதி செய்வதற்காக மட்டுமே என்று கூறினார்.
நாங்கள் எதையும் மோசமாக்கவில்லை. பிரச்சாரத்தின் போது, செய்தி அனைத்tu வாக்காளர்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யவே விரும்புகிறோம்.
இதில் தனிப்பட்ட தாக்குதல்கள் எதுவும் இல்லை.
ஆனால் நான் ராஜினாமா செய்யுமாறு பிரதமரிடமிருந்து உத்தரவு வந்தால், ராஜினாமா செய்வதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2026, 7:44 pm
சிரம்பான் ஜெயா தொகுதிக்கு நான் புதியவன் அல்ல; மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவேன்: முகுந்தன்
July 20, 2026, 5:38 pm
சுவா தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை: அமினுடின் ஹரூன் விளக்கம்
July 20, 2026, 4:48 pm
துன் டாக்டர் மகாதீர் முஹம்மதை சந்தித்த ஈமான் கட்சியின் நிர்வாகக் குழுவினர்
July 20, 2026, 2:03 pm
