நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தல்; அரசாங்கத்தைத் தாக்கிப் பேசினால் அந்த அமைச்சர்களும், துணையமைச்சர்களும் பதவி விலக வேண்டியதிருக்கும்: அன்வார் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் தேர்தலில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தைத் தாக்கிப் பேசினால் அமைச்சர்களும், துணையமைச்சர்களும் பதவி விலக வேண்டியதிருக்கும் என்று பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும்போது, ​​தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி ஒற்றுமை அரசாங்கக் கூட்டாளிகளைத் தாக்கினால், அமைச்சர்கள், துணையமைச்சர்கள், அரசு நிறுவனப் பதவிகளில் இருப்பவர்கள் பதவி விலக வேண்டியதிருக்கும்.

நேற்று துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் ஆகியோரைத் தொடர்பு கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு பதவியில் அவர் இருப்பதால், அவரால் தாக்க முடியாது. 

அவர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால், இது எதிர்ப்பிற்கான ஒரு அரசியல் களமாக அமைகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset