நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்து சங்தத் தேர்தலில் தங்க கணேசன் தலைமையிலான அணி அமோக வெற்றி

கோலாலம்பூர்:

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் தேர்தலில் தங்க கணேசன் தலைமையிலான வெற்றி கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.

இன்று சர்வே திருமுருகன் கோவில் மண்டபத்தில் மலேசிய இந்து சங்கத்தின் 49 ஆம் ஆண்டு மாநாடும் 9 உச்சமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தலும் நடைபெற்றது.

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் தலைமையில் வெற்றி கூட்டணி போட்டியிட்டது.

அதேசமயம் டாக்டர் முரளி தலைமையில் மறுமலர்ச்சி அணி போட்டியிட்டது.

இதில் வெற்றி கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெற்றனர்.

வெற்றி அணி சார்பில்
1. பொன் சந்திரன் 1,027
2. சுகுமாரன் 1,026
3. முனைவர் லிங்கேஸ்வரன் 1,026
4. ஜி.முனிஸ்வரன் 1,021
5. உமாசுதன் 1,009
6. எம்.ராதா 1,001
7. எம் குமார் 985
8. பரமசிவம் 981
9. விஜய பாஸ்கர் 980 ஆகியோர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset