செய்திகள் தமிழ் தொடர்புகள்
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள "ராயன்" திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், "கேப்டன் மில்லர்" திரைப்படத்திற்குத் தேசிய சமூக, சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் அப்படத்தில் நடித்த தனுஷுக்கு சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும், "அமரன்" திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமி-க்குச் சிறந்த இயக்குநருக்கான விருது. ஆர்.கலைவாணன்-க்குச் சிறந்த படத்தொகுப்புக்கான விருது, ஜி.வி.பிரகாஷ் குமார்-க்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "மகாராஜா" திரைப்படத்திற்காக அனல் அரசு-க்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதும் அப்படத்தில் நடித்த செல்வி சாச்சனா நமிதாஸ் அவர்களுக்குச் சிறந்த துணை நடிகை விருதும், "மெய்யழகன்" திரைப்படத்திற்காக சுரேன் ஜி-க்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், "ப்ளூ' குறும்படத்திற்காக டி. எஸ். ஹரிஹா சுதன்-க்குச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 தேசிய திரைப்பட விருதுகளைத் தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதைப் பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2026, 1:23 pm
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் சந்திக்கிறார்: சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிப்பாரா?
November 6, 2026, 1:54 pm
சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குப் பயணம்
November 6, 2026, 11:57 am
குழந்தைகளுக்கு பிடிக்கும் வடிவிலான பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக விற்பனைக்கு வந்துள்ளன
November 5, 2026, 9:31 pm
தீபாவளியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
November 4, 2026, 10:59 am
முன்னாள் சுகாதார அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது
November 2, 2026, 10:31 pm
தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
November 2, 2026, 10:20 pm
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் உத்தரவு
November 1, 2026, 1:46 pm
வாலி பிறந்த நாள் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்புரை
October 31, 2026, 5:52 pm
