நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ராயல் கிங்ஸ் குழுமத்திற்குச் சிங்கப்பூர் ஆயுதப்படை பாராட்டுச் சான்றிதழை அமைச்சர் சீ ஹொங் டாட் வழங்கினார்

சிங்கப்பூர்:

ராயல் கிங்ஸ் குழுமத்திற்கு இவ்வாண்டு சிங்கப்பூர் ஆயுதப்படையின் ஆறு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தேசியச் சேவைக்குத் தொடர்ந்து வழங்கிவரும் உறுதியான ஆதரவையும் நாட்டின் முழுமையான தற்காப்புக் கொள்கைக்கு ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டியும் அந்தச் சான்றிதழ்கள் ராயல் கிங்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற தேசிய சேவை உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தேசிய சேவையை ஆதரித்துவரும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தொழில்முனைவர்கள், கல்வி நிறுவனங்கள், தேசிய சேவையினர், சமூக அமைப்புகள் ஆகியோர் அந்த நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.

ராயல் கிங்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிராஜுதீன், ராயல் கிங்ஸ் ஆலோசனை நிறுவனம் சார்பில் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

“பாதுகாப்பான, வலிமையான, உறுதியான சிங்கப்பூரை உருவாக்கும் தேசிய முயற்சியில் எங்கள் பங்களிப்பும் தொடரும்,” என்று நிறுவனத் தலைவர் சிராஜுதீன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் குழுமத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து நிறுவனங்களின் பேராளர்களும் தங்களது நிறுவனங்களின் சார்பில் பாராட்டுச் சான்றுகளைப் பெற்றுக்கொண்டனர்.

‘வணிக வெற்றி என்பது பொருளியல் வளர்ச்சியால் மட்டுமன்று. சமூகத்திற்கு வழங்கப்படும் அர்த்தமுள்ள பங்களிப்புகளாலும் அளவிடப்பட வேண்டும் என்ற குழுமத்தின் நிலைப்பாட்டையும் இந்த அங்கீகாரம் வெளிப்படுத்துகிறது,” என்று ராயல் கிங்ஸ் குழுமம் தெரிவித்தது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset