செய்திகள் உலகம்
எபோலா நோய் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 754-ஆக உயர்ந்துள்ளது: காங்கோவில் தொடரும் துயரம்
காங்கோ:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் எபோலா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,011-ஆக அதிகரித்துள்ளது. இதில் 754 போ் உயிரிழந்துள்ளனா்.
காங்கோ சுகாதார அமைச்சகத் தரவுகளின்படி, இதுவரை 366 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 753 போ் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கடந்த மே 15 தொடங்கிய இந்த எபோலா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டும், பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
தற்போது பரவி வரும் ‘புண்டிபுகியோ’ வகை எபோலா தொற்றுக்கு இன்னும் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகளோ, பிரத்யேக சிகிச்சைகளோ இல்லாதது நோய் தடுப்புப் பணிகளில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. மேலும், அங்குள்ள மருத்துவப் பணியாளா்கள் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
அதேபோல், உள்நாட்டுப் , மக்களின் தொடா் இடம்பெயா்வுகள் காரணமாக, நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் பணி சிக்கலானது. இதனால், பாதிக்கப்பட்ட பலா் மருத்துவமனைகளை அடையாமலேயே, இருப்பிடங்களிலேயே உரிய சிகிச்சையின்றி உயிரிழந்து வருகின்றனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
