நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் பெர்சத்து சார்பில் 5 இந்திய வேட்பாளர்கள் போட்டி

நீலாய்:

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்து கட்சியின் சார்பில் 5 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் பெர்சத்து கட்சி தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ மொஹையின் யாசின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் போட்டியிடும் வேட்பாளர்களை டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இன்று அறிவித்தார்.

திரளான ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் இந்த அறிவிப்பை செய்தார்.

மொத்தம் 24 தொகுதிகளில் பெர்சத்து கட்சி போட்டியிடுகிறது.

குறிப்பாக 5 இந்திய வேட்பாளர்கள் பெர்சத்து கட்சியை பிரதிநிதித்து போட்டியிடுகின்றனர்.

டத்தோஸ்ரீ ஜெயந்திரன் ஜெராம் பாடாங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நீலாய் வட்டாரத்தில் பிரபலமான டத்தோ சரவணக்குமார் நீலாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் லாவினேஸ்வரன் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் போட்டியிடுகிறார். இம் மூவரும் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

அதே வேளையில் உரிமை கட்சியைச் சேர்ந்த சரவணன் மம்பாவ் தொகுதியிலும் மகேந்திரன் சிரம்பான் ஜெயாவிலும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் இருவரும் பெர்சத்து சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset