செய்திகள் மலேசியா
தேசிய நிலையிலான செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் மாநிலம் முதல் நிலையில் வாகை சூடியது
தைப்பிங்:
தைப்பிங் மாநகரில் நடைபெற்ற தேசிய நிலையிலான செந்தமிழ் விழா 2026இல் ஒட்டுமொத்த முதல் நிலை வெற்றியாளராக நெகிரி மாநிலம் வாகை சூடியது.
இங்குள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில் சபா உட்பட 12 மாநிலங்களில் இருந்து 230 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் இரண்டாம் நிலை வெற்றியாளராக சிலாங்கூர், மூன்றாம் நிலையில் பேரா நான்காம் நிலையில். ஜொகூர் ஐந்தாம் நிலையில் பகாங் மாநிலம் வாகை சூடியது.
இப்போட்டியில் கவிதை, திருகுறள் ஒப்புவித்தல் பேச்சுப் போட்டி உட்பட 10 வகையான மொழி ஆற்றலை வலுப்படுத்த உந்துதல் ஏற்படுத்த கடந்த 10 ஆண்டுகாலமாக இப்போட்டி நடைபெறுவதாக தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் தேசியத் தலைவர் பழனி சுப்பையா கூறினார்.
இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற கல்வி துணையமைச்சர் 4 லட்சம் ரிங்கிட்டும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் அரசு மானியமாக 55 ஆயிரம் ரிங்கிட் வழங்கி சிறப்புடன் நடைபெற பேராதரவு வழங்கியதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தமிழ்ப்பள்ளி, இடை நிலைப்பள்ளிகளுக்கு் ஆண்டு தோறும் தொடக்கமாக மாவட்டம் அடுத்து மாநிலம் இறுதியாக தேசிய நிலையில் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 10:27 pm
கோத்தா டாமன்சாரா தரவு மைய விவகாரம்; அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்
July 17, 2026, 6:33 pm
நெகிரி செம்பிலானில் பெர்சத்து சார்பில் 5 இந்திய வேட்பாளர்கள் போட்டி
July 17, 2026, 6:32 pm
தேசிய முன்னணியுடனான கூட்டணி முடிவை பாஸ் தன்னிச்சையாக எடுக்க முடியாது: டான்ஸ்ரீ மொஹைதின்
July 17, 2026, 4:50 pm
பள்ளிகளில் நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை, பகடிவதை சம்பவங்களை உடனடியாகக் கையாள வேண்டும்: பிரதமர்
July 17, 2026, 4:49 pm
