செய்திகள் மலேசியா
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உணவு விநியோகிப்பாளர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
கோலாலம்பூர்-
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியதாக உணவு விநியோகிப்பாளர் ஒருவருக்கு எதிரான இங்குள்ள மாஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டபட்டார்
எனினும், 21 வயதுடைய குற்றஞ்சாட்டப்பட்ட முஹம்மத் ரிட்சுவான் அர்மிஸ், தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜூலை 16ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில், ஜாலான் ஹங் துவாவிலிருந்து ஜாலான் இஸ்தானா நோக்கிச் செல்லும் ஜாலான் தேவான் பஹாசாவில், யமஹா ரக மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் செலுத்தி, 47 வயதுடைய முகமது நஸ்ரி ஷஹாதான் என்பவரின் மரணத்திற்கு காரணமானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41(1)இன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது
இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன், 20,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட் வரையிலான அபராதமும் விதிக்கப்பட வழிவகை உள்ளது.
நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் இன்ஸ்பெக்டர் ஷாஸ்வான் ஹசிஃபி ஷாருன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு ஜாமீன்தாரருடன் 15,000 ரிங்கிட் பிணைத்தொகை வழங்கக் கோரினார்.
இருப்பினும், முகமது ரிட்சுவானின் வழக்கறிஞர் அம்மன்ஜீத் சிங், தனது கட்சிக்காரரின் இளம் வயது மற்றும் இது அவரது முதல் குற்றம் என்பதைக் கருத்தில் கொண்டு பிணைத்தொகையைக் குறைக்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார்.
தனது கட்சிக்காரர் ஒரு உணவு விநியோகிப்பாளராகப் பணிபுரிவதால் அதிக பிணைத்தொகை செலுத்த பொருளாதார வசதி இல்லை என்றும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட மேலாய்வு அக்டோபர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காவல்துறையினரின் சாலைத் தடுப்பை தவிர்ப்பதற்காக, மோட்டார் சைக்கிளை எதிர்த் திசையில் ஓட்டி வந்த நபரால் ஏற்பட்ட இந்த கோர விபத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 10:27 pm
கோத்தா டாமன்சாரா தரவு மைய விவகாரம்; அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும்: டத்தோஶ்ரீ ரமணன்
July 17, 2026, 6:33 pm
நெகிரி செம்பிலானில் பெர்சத்து சார்பில் 5 இந்திய வேட்பாளர்கள் போட்டி
July 17, 2026, 6:32 pm
தேசிய முன்னணியுடனான கூட்டணி முடிவை பாஸ் தன்னிச்சையாக எடுக்க முடியாது: டான்ஸ்ரீ மொஹைதின்
July 17, 2026, 6:30 pm
தேசிய நிலையிலான செந்தமிழ் விழா: நெகிரி செம்பிலான் மாநிலம் முதல் நிலையில் வாகை சூடியது
July 17, 2026, 4:50 pm
பள்ளிகளில் நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை, பகடிவதை சம்பவங்களை உடனடியாகக் கையாள வேண்டும்: பிரதமர்
July 17, 2026, 4:49 pm
