நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியுடனான கூட்டணி முடிவை பாஸ் தன்னிச்சையாக எடுக்க முடியாது: டான்ஸ்ரீ மொஹைதின்

நீலாய்:

தேசிய முன்னணியுடனான கூட்டணி முடிவை பாஸ் தன்னிச்சையாக எடுக்க முடியாது.

பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

தேசியக் கூட்டணியை உருவாக்கியது பெர்சத்து கட்சி. அதற்கு காரனமாக இருந்தவர் நான். இதை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் தற்போது தேசியக் கூட்டணிக்கு தலைவராக இருக்கும் பாஸ் கட்சி, பெர்சத்துவை ஒதுக்குகிறது.

இதன் அடிப்படையில் தான் நெகிரி செம்பிலான் தேர்தலில் தேசிய முன்னணியுடன் கூட்டணி என்ற முடிவை பாஸ் எடுத்தது.

அரசியல் நிலை பாட்டை பாஸ் கட்சி தனிச்சையாக எடுக்கலாம். ஆனால் தேசியக் கூட்டணி என்று வந்தால் எங்களுடன் விவாதிக்க வேண்டும்.

அப்படி ஏதும் நடக்காமல் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஆக தேசிய முன்னணியுடனான கூட்டணி என்பது பாஸ் கட்சியின் தன்னிச்சையான முடிவாகும்.

அதே வேளையில் ஜொகூர் தேர்தலில் தேசியக் கூட்டணி சின்னத்தில் பெர்சத்து போட்டியிட்டது.

ஆனால் பாஸ் கட்சியை பிடிக்காதவர்கள் பெர்சத்துவிற்கு வாக்களிக்கவில்லை.

இதன் அடிப்படையில் தான் நெகிரி செம்பிலான் தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை பெர்சத்து எடுத்தது.

இந்த முடிவு சவாலாக இருந்தாலும் பாஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே பெர்சத்துவின் இலக்காகும்.

இதற்கு நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் துணை நிற்பார்கள்.

நீலாயில் நடைபெற்ற பெர்சத்து கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு விழாவில் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset