நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

14 வயதுடைய சிறுமியைப் பாலியல் வன்கொடுமை புரிந்த சமூக ஊடக பிரபலம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

கங்கார்- 

கடந்த ஜூன் 17ஆம் தேதி, ஜாலான் தியோங், தாமான் கங்காரில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது  நிரம்பிய சிறுமிப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இங்குள்ள கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் 

குற்றஞ்சாட்டப்பட்ட 23 வயதுடைய சமூக ஊடக பிரபலம்  ஈமான் ஹஸ்ரிக் அஜீசான், தனக்கு எதிரான குற்றங்களை மறுத்து விசாரணை கோரினார் 

நீதிபதி  ஷரீபா நோரஸ்லிதா சையத் சலீம்  முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டு வாசித்துக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376(1)-ன் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட சட்டம் வழிவகை செய்கிறது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈமான் ஹஸ்ரிக்கிற்கு ஒரு ஜாமீன்தாரருடன் 13,000 ரிங்கிட் பிணைத்தொகை வழங்கி உத்தரவிட்டது.

அத்துடன், அவர் ஒவ்வொரு மாதமும் தனக்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்ட சிறுமியையோ அல்லது அரசுத் தரப்பு சாட்சிகளையோ எந்த வகையிலும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட மேல்குறிப்பிற்காக  ஆகஸ்ட் 14-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இவ்வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நபிலா அகமது  ஆஜரானார்,

அதேவேளையில் குற்றம் சாட்டப்பட்ட ஈமான் ஹஸ்ரிக் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset