நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை, பகடிவதை சம்பவங்களை உடனடியாகக் கையாள வேண்டும்: பிரதமர்

நீலாய்:

பள்ளிகளில் நடக்கும் கொடுமைப்படுத்துதல் மற்றும் இனரீதியான அவமதிப்புகள் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைப் பிரச்சினைகளை உடனடியாகக் கையாள வேண்டும்.

ஏனெனில் அவை தற்போதுள்ள கல்வி முறையின் பலவீனங்களைப் பிரதிபலிக்கின்றன என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மத வகுப்புகள் வலுப்படுத்தப்பட்டு, மதக் கல்வி இப்போது மேம்பட்டிருந்தாலும், தார்மீகப் பிரச்சினைகள் தற்போதும் தொடர்கின்றன.

நாம் ஆழமாக ஆராய்ந்தால், ஒவ்வொரு நாளும் பகடிவதை சம்பவங்கள் நடக்கின்றன.

இதன் பொருள் பகடிவதை ஒரு நோயாக. ஒரு ஒழுக்க நோயாக மாறிவிட்டது. ஆக இதை இனி அனுமதிக்கப்படக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை, கல்வியில் இதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

சில நேரங்களில், கல்வியின் அடிப்படை என்பது நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படையில் மனித விழுமியங்களை உருவாக்குவதே என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

ஒருவர் புத்திசாலியாகவும், மேதையாகவும், முனைவர் பட்டம்  வரையிலான உயர் தகுதிகளைப் பெற்றவராகவும் இருக்கலாம்.

ஆனால் அவர் மனித விழுமியங்களைப் புரிந்து கொள்ளாமலும், மற்றவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரியாமலும் இருந்தால், அவர் உண்மையில் என்ன கற்றிருக்கிறார் என்று நாம் கேட்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset