
செய்திகள் விளையாட்டு
மலேசியாவின் கால்பந்து முன்னாள் வீரர் ஷெப்பி மாரடைப்பால் காலமானார்
பெட்டாலிங் ஜெயா:
மலேசியாவின் முன்னாள் கால்பந்து வீரர் செர்பெகத் சிங் தனது 61ஆவது வயதில் காலமானார்.
மலேசிய கால்பந்து ரசிகர்களிடையே ஷெப்பி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் அவர். பிரபல முன்னாள் கால்பந்து வீரரான அவர் இன்று மாரடைப்பால் காலமானார்.
1978 ஆம் ஆண்டு செர்பெகெத் சிங் கால்பந்து ஆட்டத்தில் முதல்முறையாக அறிமுகமானார்.
அவர் ஜோகூர் அணிக்காகத்தான் முதலில் விளையாடினார். 1996 வரை பகாங், நெகிரி செம்பிலான், பேராக் போன்ற அணிகளுக்காக விளையாடி வந்தார்,.
1982 முதல் 1991 வரை மலேசியாவுக்கான தேசிய அணியில் அவர் விளையாடினார்.
1992 - 1993 ஆம் ஆண்டு கோலாலம்பூர் அணிக்காகவும் அவர் விளையாடினார்.
செர்பெகெத் சிங் 1982, 1986 மற்றும் 1990 இல் மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் மலேசியாவைப் பிரதிநிதித்து விளையாடினார்.
1989 இல் நடைபெற்ற SEA கேம்ஸ் போட்டியில் கலந்துகொண்டு மலேசியா தங்கப் பதக்கம் வென்ற அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
2000 களின் முற்பகுதியில், ஷெப்பி தி ஸ்டார் ஆங்கில நாளிதழில் 'ஃபுட்பால் எவரி டே' எனும் வாராந்திர கால்பந்து குறித்தான சுவையான கட்டுரைகளைப் படைப்பவராகவும் இருந்தார்.
கால்பந்து நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் வருணனையாளராகவும் அவர் திகழ்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am
பிரேசிலை வீழ்த்திய பொலிவியா: உலகக் கிண்ண வாய்ப்பு தக்கவைப்பு
September 10, 2025, 8:12 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
September 10, 2025, 8:09 am