
செய்திகள் வணிகம்
இறக்குமதி வரி குறைப்பு: மலேசியாவில் இருந்து 422,383 டன் பாமாயிலை இறக்குமதி செய்த இந்தியா
கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் மலேசியாவில் இருந்து 422,383 டன் பாமாயிலை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இது முந்தைய நவம்பர் மாதத்தைவிட சுமார் 67 விழுக்காடு அதிகமாகும்.
நவம்பரில் இந்தியா 252,005 டன் பாமாயிலை இறக்குமதி செய்ததாக, Solvent Extractors’ Association of India (SEA) எனப்படும் பாமாயில் சந்தையை உற்றுக்கவனிக்கும் வணிகக் குழுமத்தின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இறக்குமதியானது, 399,583 டன் கச்சா பாமாயிலையும், 10,000 டன் சுத்திகரிக்கப்பட்ட, வெளுக்கப்பட்ட மற்றும் வாசனை நீக்கப்பட்ட (RBD) பாமோலின், 12,800 டன் கச்சா crude palm kernel oil ஆகியவற்றை உள்ளடக்கியது என SEA தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமறி 1.2 மில்லியன் டன்களாகும். அதில், சுமார் 47 விழுக்காடு பாமாயில் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் சந்தையில் சில்லறை விலை அதிகரித்து வருவதை அடுத்து, சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியைக் குறைத்துள்ளது இந்திய அரசு.
இதையடுத்து, பாமாயில் இறக்குமதி அதிகரித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பொருள்களுக்கான வரியானது 19.25% என்பதில் இருந்து 13.75%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட, வெளுக்கப்பட்ட மற்றும் வாசனை நீக்கப்பட்ட (RBD) பாமாயிலை கச்சா பாமாயில் விலையில் வாங்க முடிவதால் இந்தியாவின் இறக்குமதி அதிகரித்துள்ளதாக Solvent Extractors’ Association தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm