செய்திகள் இந்தியா
பத்ரிநாத் கோவிலில் நன்கொடை, காணிக்கைகளில் ஊழல்: பொருளாளா் சந்தேஷ் மேத்தா நீக்கம்
டேராடூன்:
உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நன்கொடை, காணிக்கைகளில் கடுமையான ஊழல் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தக் கோயில் பொருளாளா் சந்தேஷ் மேத்தா நீக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் குழுவின் தலைமை செயல் அதிகாரி சோஹன் சிங் கூறியதாவது:
பத்ரிநாத் கோயில் பெட்டகத்தில் இருந்த வெள்ளியின் அளவு, பதிவேட்டில் எழுதப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. இதுகுறித்த விவரங்கள் பதிவேட்டில் திருத்தி எழுதப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து கோயில் பொருளாளா் பொறுப்பில் இருந்து சந்தேஷ் மேத்தா நீக்கப்பட்டுள்ளாா். அந்தப் பொறுப்புக்கு கோயிலின் பூஜை கவுன்ட்டரில் பணியாற்றிய கேதாா் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். பூஜை கவுன்ட்டா் பணிக்கு சந்தேஷ் மேத்தா மாற்றப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 9:03 pm
மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?: உமர் அப்துல்லா கேள்வி
July 13, 2026, 3:24 pm
வியட்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
