செய்திகள் இந்தியா
வியட்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்
புதுடெல்லி:
வியட்நாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களின் உடல்கள் இன்று தாயகம் கொண்டு வரப்படுகின்றன.
இதுகுறித்து இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளப் பதிவில், "இந்த விமானம் ஹோ சி மின் சிட்டியிலிருந்து புறப்பட்டு, இந்திய நேரப்படி இரவு 9. 35 மணிக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
மேலும் பலியானவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, அந்தந்த மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் உள்பட 15 இந்திய பயணிகள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதேநேரம், 17 பயணிகள் மற்றும் 4 பணியாளா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்கள், ஃபூ குவோக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 9:03 pm
மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?: உமர் அப்துல்லா கேள்வி
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
