செய்திகள் இந்தியா
மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?: உமர் அப்துல்லா கேள்வி
ஜம்மு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அல்லது வெள்ளை மாளிகையை அணுகினால் தான் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஒன்றிய அரசையும் மோடியையும் கடுமையாக சாடியுள்ளார்.
ஜம்முவில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "நமது சொந்த நாட்டின் தலைநகரில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என்றால், நாங்கள் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்ப்பிடமா செல்ல வேண்டும்.!!" என்று கேள்வி எழுப்பி பா.ஜ.க அரசை கிண்டல் செய்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோடி அதன் முதல்வர் உமர் அப்துல்லா டெல்லியில் ஒரு பெரிய போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, அவரது கட்சியான நேஷனல் கான்பரன்ஸ் (NC) இந்த போராட்டத்தை நடத்தவுள்ளது.
புது டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான வரும் ஜூலை 20-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
