செய்திகள் இந்தியா
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
பக்தியார்பூர்:
பிஹார் மாநிலத்தின் சஹர்சா மாவட்டம், சிம்ரி பக்தியார்பூர் நகரில் நடைபெற்ற திருமண விருந்தில் சிக்கன் பரிமாறப்பட்டது. அப்போது தங்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாக மணமகன் வீட்டார் குற்றம் சாட்டினர். இதில் இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
ஒரு வீடியோ பதிவில், அங்கிருந்த நபர்கள் விருந்தினர்களைக் கம்புகளால் தாக்குவதையும் வாள்களை வீசுவதையும் காண முடிகிறது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்த பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.
திருமண நிகழ்ச்சியில் நடந்த இருதரப்பு மோதலில் 12 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிம்ரி பக்தியார்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
