செய்திகள் இந்தியா
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி:
ஆல்கஹால் கலப்புள்ள இருமல் சிரப் உள்ளிட்ட மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
அதிக ஆல்கஹால் கலப்புள்ள சில இருமல் மருந்துகள், டானிக்குகள், பிற வாய்வழியாக உட்கொள்ளப்படும் மருந்துத் தயாரிப்புகளை போதுமான மேற்பார்வையின்றி மருந்துச்சீட்டு இல்லாமல் விற்கப்படும்போது அதைத் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதைத் தடுக்கவே இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி 12%-க்கும் அதிகமான ஆல்கஹால் கலந்து, 30 மிலி-க்கும் அதிக அளவுள்ள பாட்டில்களில் விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் ‘அட்டவணை எச்-1’ பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, இவற்றை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் நேரடியாக மருந்தகங்களில் வாங்க முடியாது.
இந்த வகை மருந்துகளை அட்டவணை எச்-1-க்கு மாற்றுவதன் மூலம், தவறான பயன்பாட்டைக் குறைக்கவும், பொறுப்பான விநியோகத்தை உறுதி செய்யவும், மருந்துக் கண்காணிப்பை வலுப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. நோயாளிகளைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் என்பது இந்த மருந்துகள் பாதுகாப்பற்றவை அல்லது தடைசெய்யப்பட்டவை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருந்துகள் (5-ஆவது திருத்த) விதிகள், 2026 சட்டம் மூலமாக இந்த வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, வீட்டு உபயோக சாதாரண மருத்துவ பொருட்களின் வரிசையில் இடம் பெற்றிருந்த ‘சிரப்ஸ்’ என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்த திரவ மருந்துகள் (டானிக், இருமல் மருந்து) அனைத்தும், தற்போது கடுமையான மருந்து ஒழுங்குமுறை பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
