செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் இரு இந்தியர்கள் போட்டி
பாரோய்:
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் இரு இந்தியர்கள் போட்டியிடவுள்ளனர்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர்களை அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இன்று அறிவித்தார்.
20,000த்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் அவர் பெயர்களை அறிவித்தார்.
குறிப்பாக தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தலைமையில் இந்த அறிவிப்புகள் நடந்தது.
நெகிரி செம்பிலானின் 25 தொகுதிகளிலும் தேசிய முன்னணி போட்டியிடுகிறது.
இதில் இரண்டு தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சிரம்பான் ஜெயாவில் தினாளன் ராஜகோபாலும், ஸ்ரீ தஞ்சோங்கில் அச்சுதனும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 2:50 pm
நம்பிக்கை கூட்டணியின் ஒரேஒரு அமானா சட்டமன்ற உறுப்பினர் மலாக்கா முதலமைச்சருக்கு ஆதரவு
July 15, 2026, 2:48 pm
