நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணை நேர்மை குன்றாமல் பணியாற்றுவார்கள்- மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் நம்பிக்கை 

கோலாலம்பூர்- 

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அவர்கள் புதிதாக ஜொகூர் மாநில அரசாங்கத்தின் மந்திரி பெசாரை சந்திக்க இணக்கம் தெரிவித்தார் 

கடந்த சனிக்கிழமை நடந்த 16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணி வெற்றிப் பெற்றது. 

தேசிய முன்னணியின் மாநில அரசாங்கத்தின் வழிகாட்டல்கள், இலக்குகள் மற்றும் ஏனைய விவகாரங்களும் மாமன்னரும் ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி கலந்துரையாடினர். 

ஜொகூர் மாநில அரசாங்கம் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை அவர்கள் நேர்மை குன்றாமல் மக்களுக்காக நிறைவேற்றவும் மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் நம்பிக்கை தெரிவித்தார். 

கடந்த 16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி 56 சட்டமன்ற தொகுதிகளில் 48 இடங்களை வென்று மாநில அரசாங்கத்தை அமைத்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset