செய்திகள் மலேசியா
மலாக்கா சட்டமன்றம்: நான்கு ஜசெக (டிஏபி) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர்
மலாக்கா:
இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில், மாநில சட்டமன்றத்தில் உள்ள நான்கு மலாக்கா ஜசெக - டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர்
தேசிய முன்னணி (பிஎன்) தலைமையிலான மாநில அரசுக்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் தற்போது பெரிகாத்தான் நேஷனல், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்துள்ளனர்.
அந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அலெக்ஸ் சியா ஷூ சின் (பிஎச்-கெசிடாங்), லோ சீ லியோங் (பிஎச்-கோட்டா லக்ஷமணா), லெங் சாவ் யென் (பிஎச்-பண்டா ஹிலிர்), கெர்க் சீ யீ (பிஎச்-அயர் கெரோ) ஆவர்.
இருப்பினும், பார்ட்டி அமானா நேகாரா (அமானா) கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினரும், மலாக்கா பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்) தலைவருமான அட்லி ஜஹாரி (புக்கிட் கட்டில்), அந்த நான்கு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து தனித்து, ஆளும் அணியிலேயே தொடர்ந்து நீடிக்கிறார்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவையின் விதிகளைப் பின்பற்றி, ஒழுக்கம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் இன்றைய அமர்வில் பங்கேற்பார்கள் என்று சட்டமன்ற சபாநாயகர் டத்தோ இப்ராஹிம் டுரும் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வளர்ச்சி மற்றும் மக்களின் நலனில் கவனம் செலுத்துவதற்காக, இந்த முடிவை ஒத்திவைக்குமாறு மலாக்கா டிஏபி-யை வலியுறுத்தினார்.
நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க அனுமதிக்கும் வகையில், மலாக்கா மாநில சட்டமன்றம் மாநில அரசியலமைப்பில் திருத்தங்களை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, மாநில அரசிலிருந்து உடனடியாக விலகுவதாக மலாக்கா டிஏபி அறிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 2:50 pm
நம்பிக்கை கூட்டணியின் ஒரேஒரு அமானா சட்டமன்ற உறுப்பினர் மலாக்கா முதலமைச்சருக்கு ஆதரவு
July 15, 2026, 2:48 pm
LRT 3 இலகு ரயில் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: யாருக்கும் காயம் ஏற்படவில்லை
July 15, 2026, 10:21 am
