செய்திகள் மலேசியா
மித்ராவின் தர்ம மடானி, செலிக் மடானி திட்டங்களின் கீழ் 120 ஆலயங்கள், 117 பாலர் பள்ளிகள் பயனடைந்தன: ரவீந்திரன் நாயர்
புத்ராஜெயா:
மித்ராவின் தர்ம மடானி, செலிக் மடானி திட்டங்களின் கீழ் 120 ஆலயங்கள், 117 பாலர் பள்ளிகள் பயனடைந்துள்ளன.
மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் இதனை கூறினார்.
சமூக நிறுவனங்களை வலுவூட்டுதலுடன் சமூக நல்வாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இரண்டு முக்கிய முன்னெடுப்புகளான மடானி பாலர் பள்ளி கல்வி மானிய உதவித் திட்டம், தர்ம மடானி திட்டம் ஆகியவற்றை மித்ராவின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக இந்திய சமூகத்தின் வளர்ச்சியை வலுப்படுத்துவதில் மடானி அரசாங்கம் உறுதியாக உள்ளது.
அவ்வகையில் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செலிக் மடானி 2026 தொடர் 2, தர்ம மடானி திட்டத் தொடர் 3 ஆகிய நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற்றன
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் வழிகாட்டல், ஆலோசனையின் அடிப்படையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
செலிக் மடானி 2026 பாலர் பள்ளி கல்வி மானிய உதவித் திட்டத்தின் இரண்டாம் தொடரின் கீழ் மொத்தம் 117 பாலர் பள்ளி நடத்துநர்கள் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.
அதே நேரத்தில், தர்ம மடானி திட்டத்தின் மூன்றாம் தொடரின் கீழ் 120 கோயில்கள் ஒப்புதல் கடிதங்களைப் பெற்றன.
இதன் மூலம், நாடு தழுவிய அளவில் இரண்டு மித்ரா திட்டங்களின் செயலாக்கமும் நிறைவடைந்தது என்று அவர் கூறினார்.
செலிக் மடானி திட்டத்தில் இன்று வரை 162 பாலர் பள்ளிகள் இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதியானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இத்திட்டம் நாடு முழுவதும் 3,612 இந்தியக் குழந்தைகளுக்குப் பயனளிக்கிறது. இதற்காக.8.87 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தர்ம மடானி திட்டத்தின் தொடர் 3இன் கீழ், நாடு முழுவதும் உள்ள 168 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு 3.36 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் 3-இன் அங்கீகாரத்துடன், தர்ம மடானி திட்டம் மொத்தம் 12.54 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன் 627 இந்து வழிபாட்டுத் தலங்களுக்குப் பயனளித்துள்ளது என்று ரவீந்திரன் நாயர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 2:50 pm
நம்பிக்கை கூட்டணியின் ஒரேஒரு அமானா சட்டமன்ற உறுப்பினர் மலாக்கா முதலமைச்சருக்கு ஆதரவு
July 15, 2026, 2:48 pm
LRT 3 இலகு ரயில் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: யாருக்கும் காயம் ஏற்படவில்லை
July 15, 2026, 10:21 am
