நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு பூடி 95 பெட்ரோல் மானியத்தை அரசாங்கம் தனியாக பிரிக்க வேண்டும்: நாதன்

புத்ராஜெயா:

இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு பூடி 95 பெட்ரோல் மானியத்தை அரசாங்கம் தனியாக பிரிக்க வேண்டும்.

தரை பொதுப் போக்குவரத்து மாற்றமைப்புச் சங்கத்தின் தலைவர்  எம். நாதன் இதனை பரிந்துரைத்தார்.


நியாயமான,  இலக்கு சார்ந்த செயலாக்கத்தை உறுதி செய்வதற்காக, தனிநபர் பூடி 95 மானியங்களை இ-ஹெய்லிங் செயல்பாடுகளுக்கான மானியங்களிலிருந்து அரசாங்கம் தெளிவாகப் பிரிக்க வேண்டும்.

முதல் 200 லிட்டர் எரிபொருள் நுகர்வு, மலேசியர்களுக்கான தனிநபர் நுகர்வு மானியமாகவே பராமரிக்கப்பட வேண்டும்.

அது இ-ஹெய்லிங் செயல்பாட்டு மானியத்தின் ஒரு பகுதியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது.

மேலும் முழுநேர ஓட்டுநர்களுக்கு (இ-ஹெய்லிங்கிற்கு 800 லிட்டர்) போதுமான அளவு இல்லை என்பது உண்மை தான்.

இருப்பினும், இப்போது முக்கியமான இரண்டாவது அம்சம் என்னவென்றால், இந்த ஒதுக்கீடு உடனடியாகப் பிரிக்கப்பட வேண்டும்.

இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் 800 லிட்டர் ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும்போது, ​​அதை 200 லிட்டர் ஒதுக்கீட்டுடன் கலக்கக் கூடாது.

வணிக ரீதியான செயல்பாடுகளுக்கு ஒரு தனி மானிய முறை தேவை.

ஏனெனில் அந்த எரிபொருள் நுகர்வு, சமூகத்திற்குப் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கப் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

பூடி மடானி 95 வழிமுறையை மேம்படுத்துவது குறித்த ஒரு குறிப்பாணையையும், இ-ஹெய்லிங் காப்பீட்டிற்குத் தற்காலிகத் தடை விதிப்பதற்கான ஒரு விண்ணப்பத்தையும் இன்று நிதியமைச்சிடம் சமர்ப்பித்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset