செய்திகள் மலேசியா
FIFA உலகக் கிண்ண போட்டி சூதாட்டம்: ஆறு அந்நிய நாட்டவர்களுக்கு தலா 1,200 ரிங்கிட் அபராதம் விதிப்பு
பாலெக் பூலாவ்-
கூட்டாக இணைந்து FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டி சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆறு அந்நிய நாட்டவருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் தலா 1200 ரிங்கிட் அபராதம் விதித்தது
உலகக் கிண்ண சூதாட்ட நடவடிக்கையில் நான்கு சீன நாட்டு ஆடவர்களும் இரு மியன்மார் நாட்டு பெண்களும் ஈடுபட்டனர்
நீதிமன்றம் விதித்த அபராத தொகையை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முறையாக செலுத்த தவறினால் அவர்கள் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மாஜிஸ்டிரெட் சியா ஹுவெ திங் உத்தரவிட்டார்
கடந்த ஜூலை 1ஆம் தேதி பாயான் பாருவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்ககத்தில் அவர்கள் இந்த FIFA உலகக் கிண்ண போட்டியின் சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றம் புரிந்தனர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது.
1953 ஆம் ஆண்டு பந்தயச் சட்டத்தின் பிரிவு 6(1) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது, இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM5,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
துணை அரசு வழக்கறிஞர் இக்மல் அஃபாண்டி சுல்கிஃப்லி இந்த வழக்கை நடத்தினார், அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் வழக்கறிஞர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 2:50 pm
நம்பிக்கை கூட்டணியின் ஒரேஒரு அமானா சட்டமன்ற உறுப்பினர் மலாக்கா முதலமைச்சருக்கு ஆதரவு
July 15, 2026, 2:48 pm
LRT 3 இலகு ரயில் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: யாருக்கும் காயம் ஏற்படவில்லை
July 15, 2026, 10:21 am
