நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை கூட்டணியின் ஒரேஒரு அமானா சட்டமன்ற உறுப்பினர் மலாக்கா முதலமைச்சருக்கு ஆதரவு 

ஆயர் கெரோ- 

மலாக்கா மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோப்பிற்கு தாம் தனது ஆதரவினை வழங்குவதாக மலாக்கா மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் அட்லி ஸஹாரி கூறினார் 

தற்போது நம்பிக்கை கூட்டணி சார்பாக ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர், அதுவும் அமானா கட்சி தொடர்ந்து மாநில அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்குவதாக அவர் சொன்னார். 

முன்னதாக, மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து நான்கு DAP சட்டமன்ற உறுப்பினர்கள் விலகுவதாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். 

மலாக்கா மாநிலத்தில் தேசிய முன்னணி தலைமையிலான மாநில அரசாங்கம் ஆட்சி நடந்து வருகிறது. 

சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் மூலம் நியமிக்க அனுமதிக்கும் மாநில அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மாநில சட்டமன்றம் ஒப்புதல் அளித்த உடனேயே, மலாக்கா DAP மாநில அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மலாக்கா மாநில நம்பிக்கை கூட்டணி நாளை கூட்டம் ஒன்றை நடத்தும் என்று அட்லி ஸஹாரி குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset